இந்த சம்மருக்கு கூட்ட நெரிசல் குறைந்த, குளிர்ச்சியான இடங்கள் சில!
தவாங், அருணாச்சல பிரதேசம்... இது இமயமலையின் மூச்சடைக்கக்கூடிய அழகிய காட்சிகள், மடங்கள் மற்றும் பழமையான ஏரிகளுடன் விரிகிறது. காடுகளின் வழியே டிரெக்கிங் செய்யலாம்.
கர்நாடகாவின் பரபரப்பான சுற்றுலா மையங்களில் இருந்து விலகி, அழகிய கடற்கரைகள், பாறைகள் மற்றும் ஆன்மீகம் என விரிகிறது கடற்கரை நகரமான கோகர்ணா.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, 'குளிர் பாலைவன மலைப் பள்ளத்தாக்கு' என அழைக்கப்படுகிறது. உயர்ந்த சிகரங்களும், நீலவானமும் தனிமை பிரியர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
பச்சைப் பசேலென கிராமப்புற அனுபவத்தை விரும்புபவர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்குக்கு செல்லலாம். டிரெக்கிங், பழங்குடியினருடன் நட்பு என இனிய அனுபவம் பெறலாம்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கஜ்ஜியார், 'இந்தியாவின் மினி ஸ்விட்சர்லாந்து' என குறிப்பிடப்படுகிறது. அழகிய புல்வெளிகள், தேவதாரு காடுகளுக்கு இடையே பனி மூடிய இமயமலையை ரசிக்கலாம்.
அசாமில் பிரம்மபுத்திரா நதியின் நடுவே அமைந்துள்ள மஜூலி கலாச்சாரம் மற்றும் இயற்கை பிரியர்களை வெகுவாக ஈர்க்கிறது. படகுகள் மூலம் மட்டுமே இங்கு செல்ல முடியும்.
டிசுகோ பள்ளத்தாக்கு... நாகாலாந்து மற்றும் மணிப்பூரின் எல்லையில் அமைந்துள்ள அழகிய இடம் இது. மூடுபனியால் சூழப்பட்ட மற்றும் வண்ணமயமான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சொர்க்கம்.