பெண்களே... ஜீன்ஸ் தேர்வுக்கான அல்டிமேட் கைடு இங்கே!
ஒரு நல்ல ஜீன்ஸ் உறுதியாக, உடலை அணைத்தபடி இருக்கும். அதில் பல ஸ்டைல்கள், ஃபிட்கள் உண்டு.
ஸ்கின்னி பிட் வகை ஜீன்ஸ் தொடையுடன் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும். பலவிதமான டாப்ஸ் மற்றும் ஷூக்களுடன் இந்த ஸ்கின்னி பிட் ஜீனை மேட்ச் செய்யலாம்.
ஸ்கின்னி ஜீன்ஸ் தேவையில்லை என்பவர்களுக்கு ஏற்றது இந்த ஸ்ட்ரெயிட் லெக் ஃபிட். டெனிம்கள் இடுப்பிலிருந்து விளிம்பு வரை நேராக இருக்கும்.
ரிலாக்ஸ்டு ஃபிட் வழக்கமான ஜீன்ஸ்களை விட தளர்வாக இருக்கும், அதற்காக தொளதொளவென்று தெரியாது. சௌகரியமாக உணர வைக்கும்.
பூட்கட் வகை ஜீன்ஸும் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரெட்ரோ ஜீன்ஸ் சாயலுடன் இருக்கும் இந்த ஜீன்ஸ் பேரிக்காய் வடிவ உடல்களைக் கொண்டவர்களுக்கு ஏற்றது.
ஒரு ஜீன்ஸை 2 முறை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். மார்கெட்டிங் போன்ற வெளியில் அலையும் நபர்களுக்கு நபர்களுக்கு இது பொருந்தாது.
குளிர்ந்த நீரைப் பயன்படுத்தித் துவைக்க வேண்டும். அதனால் துணியின் நிறம் மங்காது. சுருக்கமடையாது.