த்ரில்லான ரிவர் ராஃப்டிங் செய்ய...இந்தியாவின் சிறந்த ஸ்பாட்கள்!
இந்தியாவில் ரிவர் ராஃப்டிங்கிற்கு பிரபலமான இடம் ரிஷிகேஷ் தான். ஆண்டு முழுவதும் வற்றாத கங்கை நதியில் பெருக்கெடுத்தோடும் நீருக்கு மத்தியில், பயணம் செய்வது சிறப்பான அனுபவத்தை தரும்.
லடாக் சிந்து நதியில் ரிவர் ராஃப்டிங் செய்ய முயற்சி செய்து பாருங்கள். நதி பொதுவாக குளிர்காலத்தில் உறைந்திருக்கும். அதனால் தண்ணீர் கொஞ்சம் உருகி ஓடும் மாதம் பார்த்துவிட்டு செல்லுங்கள்.
இந்தியாவில் நுரைத்து வரும் ஒயிட் வாட்டர் ராஃப்டிங் விளையாட்டை ரசிக்க ஸ்பிட்டி பிரபலமான இடம். பாய்ந்து செல்லும் ஸ்பிடி ஆற்றின் வழியாக ராஃப்டிங் செய்வது மறக்க முடியாத அனுபவத்தை தரும்.
மகாராஷ்டிராவின் குண்டலிகா நதியில் ரிவர் ராஃப்டிங்கை முயற்சி செய்யுங்கள். குண்டலிகா நதி வெயில் காலத்தில் கொஞ்சம் வறண்டு காணப்படும் அதனால் மழை பொழிந்து முடிந்த சமயத்தில் செல்வது நல்லது.
உத்தரகாண்டின் அலக்நந்தா நதி, கங்கையின் இரண்டாவது பெரிய துணை நதியான மிகவும் கடினமான ரிவர் ராஃப்டிங் தளங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. ராஃப்டிங் நீளம் சுமார் 25 கி.மீ., ஆம்.
ராஃப்டிங் செய்யத்தெரியாது இப்போது தான் முதல் முறை என்றால் உங்களுக்கு ஏற்ற இடம் குலு மணாலி. பியாஸ் நதியில் பாய்ந்து செல்லும் நீர் ராஃப்டிங்கின் சிறந்த அனுபவத்தை தரும்.
நேபாளத்தில் தோன்றி இந்தியாவில் கிழக்கு பகுதி வழியாக வங்க கடலில் கலக்கும் டீஸ்டா நதி சிக்கிம் வழியாக பாய்கிறது. தரம் 1 முதல் 4 வரை மதிப்பிடப்பட்ட ரேபிட் ரிவர் ராஃப்டிங் அனுபவத்தை இங்கு காணலாம்.
கூர்கில் உள்ள பாராபோல் நதி சிறந்த ராஃப்டிங் வாய்ப்புகளை வழங்குகிறது. சவால் நிறைந்த நீரோடைகள் இந்தப்பாதையில் உண்டு என்றபோதும் முன் அனுபவம் இல்லாதவர்களும் இந்த சாகசப்பயணத்தில் ஈடுபட ஏற்ற இடம்.