கோடை வெயிலில் நியூ நார்மல் எனும் புதிய மாற்றம்!

இந்த ஆண்டு கோடை காலத்தில், 'நியூ நார்மல்' என்ற முறையில், இயல்பான வெப்ப அளவில் மாறுபாடும் என, பேரிடர் மேலாண்மை துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில், கோடையின் தாக்கம் கடுமையாக இருக்கும். குறிப்பாக, மே 4-28 வரையிலான அக்னி நட்சத்திரம் காலத்தில், வெயிலின் தாக்கம் உச்சம் பெறும்.

இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கோடையின் இயல்பு நிலையில், புதிய மாற்றத்தையும், அனுபவத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

'நியூ நார்மல்' என்ற முறையில், இதுவரை கோடை காலத்தில், நாம் பெறாத ஒரு புதிய அனுபவம் இந்த ஆண்டு ஏற்படுமாம்.

இதனால், சென்னை போன்ற தமிழக நகரங்களில் இயல்பான வெப்ப நிலையில் இருந்து, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.

வாகனங்கள், 'ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்கள் வாயிலாக ஏற்படும் நகர்ப்புற வெப்பம் என்ற அடிப்படையில், கூடுதலாக, 2 டிகிரி செல்ஷியஸ் என, 6 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுமாம்.

இதனால் பகலில், 12:00 முதல், 3:00 மணி வரையிலான நேரத்தில், நேரடி வெயிலில் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

இந்த குறிப்பிட்ட சமயத்தில், சூரியனில் இருந்து வரும் ஒளிக்கற்றைகள், மனிதர்கள் உடலில் இருந்து நீர்ச்சத்துகளை விரைவாக உறிஞ்ச வாய்ப்பு அதிகமாக உள்ளது.