இன்று உலக மழைக்காடுகள் தினம்!

மழைக்காடுகள் என்பது பெருமளவு மழைப்பொழிவு உள்ள வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் அடர்ந்த காடு.

இவையே பூமியின் பழமையான காடுகள். பூமியில் 50 சதவீத பல்லுயிரினங்களுக்கு தாயகமாக இவை அமைந்துள்ளன.

உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 30 சதவீதத்தை இவை உறிஞ்சுகின்றன.

இயற்கை மருத்துவத்துக்கான பல மூலிகைகள் இங்குதான் கிடைக்கின்றன.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், கனிமங்களுக்காக காடுகளை அழிப்பது, நில ஆக்கிரமிப்பு போன்றவை மழைக் காடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

பூமியின் பாதுகாவலாக விளங்கும் இக்காடுகளை, அழிவில் இருந்து காக்க வலியுறுத்தி ஜூன் 22ல் உலக மழைக்காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினத்தில் காடுகளை மீட்டு விரிவுபடுத்தவும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே மழைக்காடு பகுதிகளில் மரம் நடும் நிகழ்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும்.