இன்று ஸ்ரீஅன்னை பிறந்த தினம்!

எப்போதும் விழிப்புடன் இருந்தால் முன்னேற்றம் குறித்த சிந்தனை மலரத் தொடங்கும்.

நாம் வாழ்வில் முன்னேறுவதற்காகப் பிறந்திருக்கிறோம். அதற்காக கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

மனிதனின் மதிப்பு அவனுடைய கவன சக்தியைப் பொறுத்து இருக்கிறது. எதையும் கவனமாக செய்பவனே முன்னேறுவான்.

உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டால், வாழ்வில் உயர்வோம் என்ற எண்ணம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவும்.

ஒருபோதும் உணர்ச்சி வசப்படாதே. இதனால் பொறுமை இழந்து முடிவு எடுக்க முடியாமல் தடுமாற நேரிடும்.

உள்ளத்தில் அமைதி இருந்தால் கடுமையான உடல் வேதனை கூட சற்று தளர்ந்து விடுவதை உணரலாம்.