ஏப்ரல் 12 : இன்று சர்வதேச விண்வெளி பயண தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12ம் தேதி, விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இத்தினத்தை மனித விண்வெளிப் பயணத்தின் சர்வதேச தினமாக அறிவித்தது,

1961 ஏப்ரல் 12 ல், சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் முதல் மனித விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இதனால் ககாரின் 'விண்வெளியில் முதல் மனிதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

முதல் மனித விண்வெளிப் பயணத்தின் 50 வது ஆண்ட்டின் நிறைவை முன்னிட்டு இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.

1963ல் வாலண்டினா தெரேஷ்கோவா என்ற பெண்ணும் விண்வெளிக்குச் சென்றார். பின் பல நாடுகளும் விண்வெளிப் பயணத்தை ஊக்குவித்தன.

விண்வெளிப் பயணங்கள் அமெரிக்காவின் நிலாவின் பயணத்துக்கும் முன்னோடியாக இருந்தது. மேலும் எல்லை இல்லா விண்வெளி ஆய்வுக்கான பாதையை அமைத்தது.

விண்வெளிப் பயணத்தின் சர்வதேச தினத்தின் இந்த (2024) ஆண்டுக்கான கருப்பொருள் விஞ்ஞான ஆர்வத்தை ஊக்குவித்தல் ஆகும்.