இன்று உலக பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தினம்

உலக பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் நவ., 2ல் கடைப்பிடிக்கப்படுகிறது.

அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை மட்டும் பத்திரிகையாளர்கள் மக்களுக்கு வழங்குவதில்லை.

அவர்கள் போர், இயற்கை பேரிடர், வன்முறை உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் இருந்தும் மக்களுக்கு செய்திகளை வழங்குகின்றனர்.

இவர்களை பாதுகாக்க வலியுறுத்தி பத்திரிகையாளர் மீதான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., எண்ணியது.

அதற்காக இத்தினம் ஐ.நா., சார்பில் நவ. 2ல் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 2023 - 2024ல் 162, 1993ல் இருந்து 1700 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் இதில் 10க்கு 9 சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டனையின்றி தப்பி விடுகின்றனர்.

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களுக்கு சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இத்தினத்தின் நோக்கமாகும்.