பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற டாப் 10 முருகன் கோவில்கள் பற்றி தெரிந்துக்கொள்வோமா…
திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதல் வீடாகும்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருக தலம் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாகும்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருக தலம் அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும்.
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலையில் உள்ளது. இது நான்காம் படைவீடாகும்.
திருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஐந்தாம் படைவீடாகும்.
மதுரை மாவட்டத்தில் சோலைமலையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாகும்.
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் சென்னையில் உள்ள வடபழனியில் அமைந்துள்ளது.
பிரபலமான குன்றத்தூர் முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அமைந்துள்ளது.
கோயம்புத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்றது மருதமலை முருகன் கோவில். இங்கு முருகன் சுப்பிரமணிய சுவாமி, தண்டாயுதபாணி, மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில்.