2025ல் பிறப்பவர்கள் ஜென் பீட்டா எனும் புதிய தலைமுறை!

கடந்த, 1982 முதல் 1996 வரை பிறந்தவர்கள், 'மில்லினியல்கள்' என்றும், 1996 முதல் 2010 வரை பிறந்தவர்கள், 'ஜென் இஸட்' என்றும் அழைக்கப்பட்டனர்.

2010 முதல் 2024க்கு இடையில் பிறந்தவர்கள், 'ஜென் ஆல்பா' என்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 2025ல், 'ஜென் பீட்டா' எனும் புதிய தலைமுறை உருவாகிறது.

'இன்ஸ்டாகிராம்' தான், உலகம்; 'ரீல்ஸ்'கள் தான், உயிர் காக்கும் என, வாழும், தற்போதைய, 'ஜென் ஆல்பா' தலைமுறைக்கும், முந்தைய தலைமுறைக்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

இதில், அவர்களையே பழசாக்கும் வகையில் உருவாகியுள்ளது தான், 'ஜென் பீட்டா' தலைமுறை.

வரும், 2035ல், உலக மக்கள் தொகையில், 16 சதவீதத்தினர், 'ஜென் பீட்டா' தலைமுறையைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

இவர்கள் 22ம் நுாற்றாண்டைப் பார்க்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் 'பீட்டா' குழந்தைகளின் அன்றாட வாழ்வில், தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என, கூறப்படுகிறது.

குறிப்பாக, ஏ.ஐ., தொழில்நுட்பம் 'பீட்டா' தலைமுறையினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி, பணியிடங்கள், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்குகளிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.

காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் என, பல முக்கியமான சவால்களுடன் கூடிய, சமூக வாழ்க்கையை, 'பீட்டா' தலைமுறையினர் எதிர்கொள்வர்.