கடலின் நடுவே உள்ள கிரேட் ப்ளூ ஹோல்!

மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒர் சிறிய நாடான பெலிஸ் (belize) நாட்டின் கடற்கரை மையத்தில் கிரேட் ப்ளூ ஹோல் அமைந்துள்ளது.

கடலின் நடுவே 300 மீட்டர் அகலமும் 125 மீட்டர் ஆழமும் கொண்ட கிரேட் ஃப்ளூ ஹோல், கடலின் நடுவே போடப்பட்ட ஓர் பெரிய துளைபோலக் காட்சியளிக்கிறது.

நீருக்கடியில் ஸ்டாலாக்டைட் (stalactite) என்ற சுண்ணாம்புக் கற்களால் ஆன குகைகள் உள்ளன. இந்த சுண்ணாம்புக் கற்கள் 9-12 மீட்டர் வரை செங்குத்தாக வளர்ந்து குகைகளை அலங்கரிக்கின்றன.

கிரேட் ப்ளூ ஹோல் உலகின் முதல் 10 சிறந்த ஸ்கூபா டைவிங் இடங்களில் ஒன்றாக உள்ளது. நீரின் மேற்பரப்பிலிருந்து 34 முதல் 45 மீட்டர் தொலைவில் உள்ள குகைகளால் டைவிங் ரசிகர்கள் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர்.

பெலிஸ் நாட்டின் ப்ளூ ஹோலில் டைவிங் செய்வதில் உள்ள சவால்கள் காரணமாக, குறைந்தபட்சம் 24 டைவ்களை முடித்த பயிற்சிபெற்ற டைவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவர்.

காளை சுறாக்கள், கரீபியன் ரீஃப் சுறாக்கள், சுத்தியல் சுறாகள் உள்ளிட்ட பல வகையான சுறாக்களின் வாழ்விடமாக உள்ளது புளூ ஹோல்.

லைட்ஹவுஸ் போன்ற வட்டவடிவப் பாறைகள், நீர் மீன்கள், கிளி மீன்கள் ஹாக்ஸ்பில் ஆமைகள், ஸ்டிங்ரேஸ் படல் மீன்கள் உள்ளிட்டவை இப்பகுதியில் உள்ளன.