5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
இதில் கண் விழி ஸ்கேன், விரல் ரேகை ஸ்கேன் போன்ற பையோமெட்ரிக் டேட்டா இருக்காது.
டிமோகிராபிக் தகவல்கள், குழந்தையின் போட்டோ மட்டும் இடம்பெறும்.
முதலில் UIDAI - uidai.gov.in என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பின் அதில் இருக்கும் என்ரோல்மென்ட் (Enrollment) படிவத்தில் விவரங்களை நிரப்ப வேண்டும்.
பிறகு ஆதார் அட்டை விண்ணப்பிக்க அப்பாயின்மென்ட் வாங்கவும்.
குறிப்பிட்ட நாளில் உங்களுக்கு அருகில் உள்ள Enrollment மையத்திற்கு செல்லவும்.
குழந்தையின் பெற்றோர் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை மையத்தில் கொடுத்து விண்ணப்பிக்கவும். அவ்வளவு தான்!