இந்தியத் தேர்தல் விதிகள் 1961-இன் விதி எண் 49-ஓ 'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்பதை வாக்காளர்கள் பதிவுசெய்ய அனுமதித்தது.

PUCL எதிராக யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இது தேர்தல் செயல்பாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

100 சதவீத வாக்கு பதிவை உறுதி செய்யவே 'யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' (None of the Above, NOTA) என்பது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சேர்க்கப்பட்டது.

2013ல் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், டில்லி , மபி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களிலும் முதல் முறையாக நோட்டா பயன்படுத்தப்பட்டது.

பின்னர் 2014 பொதுத் தேர்தலிலும் முதல் நோட்டா பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் முறையாக 2013இல் ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒருவேளை தேர்தலில் ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்தால் தேர்தல் ரத்தாகுமா என்று எண்ணினால் அது அப்படி அல்ல.

நோட்டாவுக்கு அடுத்தபடியாக ஒரு வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றிருந்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

எனவே நோட்டாவில் வாக்களித்தால் தேர்தல் ரத்தாகும் என்பது வதந்தியே.