வாழ்க்கை என்பது... டோனி ராபின்ஸின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள் !
தோல்வியடைபவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்; வெற்றி பெறுபவர்கள் இறுதியில் அது எப்படி இருக்கும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
ஒவ்வொரு பிரச்னையும் ஒரு பரிசு... பிரச்னைகள் இல்லாமல், நாம் வளர மாட்டோம்.
உங்கள் முடிவுகளில் உறுதியாக இருங்கள், ஆனால் அணுகுமுறையில் நெகிழ்வாக இருங்கள்.
நேற்று என்பது வெறும் கனவு, நாளை என்பது வெறும் பார்வை. ஆனால் இன்று நன்றாக வாழ்ந்தால் ஒவ்வொரு நேற்றைய தினம் மகிழ்ச்சியின் கனவாகவும் , நாளை என்பது நம்பிக்கையின் பார்வையாகவும் மாறும்.
இலக்கு என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை நீங்கள் அடைய முடியாது.
நாம் என்ன பெறுகிறோம் என்பது முக்கியமல்ல. ஆனால் நாம் யாராக மாறுகிறோம், என்ன பங்களிக்கிறோம் என்பதுதான் வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்.
வாழ்க்கை என்பது புயல் கடந்து போகும் வரை காத்திருப்பது அல்ல; அது மழையில் நடனமாடக் கற்றுக்கொள்வதை பற்றியது.
சாதனையாளர்கள் அரிதாகவே, எப்போதாவது ஒரு பிரச்னையை நிரந்தரமாகக் காண்பர். அதே சமயம் தோல்வியுற்றவர்கள் சிறிய பிரச்னைகளைக் கூட நிரந்தரமாகக் காண்பர்.
நீங்கள் பெரும்பாலும் என்ன செய்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள்.
வெற்றிக்கான பாதை மிகப்பெரிய, உறுதியான நடவடிக்கையை எடுப்பதாகும்.