விற்பனைக்கு வரும் இதய வடிவிலான தீவு... வாங்க நீங்க ரெடியா?
காதலர் தின கொண்டாட்டத்தினூடே குரோசியாவில் உள்ள 'கேலெஸ்ஞ்ஜாக்' தீவின் ஒரு பகுதியானது விற்பனைக்கு வந்துள்ளது.
பாஸ்மேன் சேனலில் (pasman channel) அமைந்துள்ள இந்த தீவு குரோசியாவின் மிகப் பிரபலமான ஒன்றாகும்.
இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் ஆண்டுக்கு பல மில்லியன் புகைப்படங்கள் எடுத்துக் குவிக்கப்படுகின்றன.
இந்தத் தீவில் பெரிதாக சொல்லிக் கொள்வது போன்று ரிசார்ட்கள் இல்லை எனினும், இங்குச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வந்து அலைமோதிய வண்ணமே இருக்கிறது.
பாடகியான பியோன்சே, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், கூடைப்பந்து வீரரான மைக்கல் ஜோர்டன் போன்ற பல பிரபலங்களும் இங்கு வந்துள்ளனர்.
ஒரு லட்சத்து 42 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் ஒரு பகுதியாக 40 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பகுதி விற்பனைக்கு வருகிறது.
இது 13 மில்லியன் யூரோ அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.115 கோடிக்கு விலை நிற்ணயிக்கப்பட்டுள்ளது.