ஸ்லிம்மாக்கும் ஹூலா ஹூப்!
ஹூலா ஹூப் என்பது மெல்லிய வளையத்தை உடலில் இடுப்பு, கை, கால் மற்றும் கழுத்து பகுதிகளில் சுழற்றுவது.
ஹூலா ஹூப் பயிற்சியை தினசரி 15 நிமிடங்கள் வரை செய்யலாம் இதை செய்யும்போது நேராக நின்று கொண்டு, முதுகெலும்பு நேராக வைக்கவும்.
இது உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை போக்கவும் உதவுகிறது.
வயிற்று தசைகளை பலப்படுத்துகிறது, உடல் செயல்பாட்டை தூண்டுகிறது.
இதயம் மற்றும் சுவாச அமைப்புகளை பலப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
அதிக கலோரிகளை எரிப்பதன் மூலம், இடுப்பை சுற்றியுள்ள கொழுப்புகளை கரைக்கிறது.
கால்கள் மற்றும் முதுகெலும்புகளை பலப்படுத்துகிறது. தசைகளைப் பலப்படுத்துகிறது.
நாள்பட்ட நோய்கள் அல்லது உள் உறுப்புக்களில் ஏதாவது நோய்கள் இருந்தால் வளையத்தில் பயிற்சியைத் தொடங்கும் முன் மருத்துவரை ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.