ஹனிமூன் செல்ல இந்தியாவில் சிறந்த இடங்கள்
இப்போதெல்லாம் திருமண பட்ஜெட்டை திட்டமிடும் போதே ஹனிமூன் பேக்கேஜ்க்காகவும் பலர் கணிசமான தொகையை ஒதுக்குகின்றனர்.
ஊட்டி, கொடைக்கானல், மூணாறு போன்ற இடங்களே பலரின் சாய்ஸாக உள்ளது.
அழகிய ஏரி, மலைப்பிரதேசம் அனைத்தும் வெளிநாடுகளில் மட்டுமே சாத்தியம் என நினைப்போர் உண்டு.
இதைத் தவிடுபொடியாக்கும் வகையில் இங்கேயே இளம் தம்பதிகள் காதல் ஜோடிகளாக உலா வர பல அழகிய சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
லடாக்கில் அழகிய ஏரிகளும், மடங்களும், மனதை மயக்கும் இயற்கை காட்சிகளும், மலை உச்சிகளின் அழகும் இங்கு தாராளம்.
குல்மார்க் என்றால் மலர் மைதானம் எனப் பொருள். திறந்த வெளியில் எங்கும் பனி படர்ந்து காட்சியளிக்கிறது.
ஒன்றோடொன்று இணைந்துள்ள அழகிய தால், நைஜின் ஏரிகளில் நீண்ட படகுச்சவாரி, படகு வீடுகள், கண்கவரும் முகலாய மலர்த்தோட்டங்கள் என ஸ்ரீநகரில் அழகாக நேரம் நகர்கிறது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சமவெளிகள் நிறைந்த பகுதியாக தர்மசாலா உள்ளது. பசுமை போர்த்திய அடர்ந்த காடுகளும் இங்கு உள்ளன.
நைனிடால்... மலைகளின் நடுவே சூழப்பட்ட ஒரு தீவு போல அளிக்கும் நைனி ஏரியில் படகு சவாரி செய்வது ரம்மியமான, மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
மலைகளின் ராணியான ஊட்டியை தெரியாதவர்களே இல்லை எனலாம்.
வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனி போர்த்திய மலைச்சிகரங்கள், ஆப்பிள் தோட்டங்கள் என சுற்றுலாப்பயணிகளை தன்பக்கம் கவர்ந்துள்ளது மணாலி.