இன்று உலக பட்டினி தினம்!

இன்று உலகம் முழுவதும் சுமார் 80 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர் இந்தியாவில் சுமார் 22 கோடிக்கும் மேற்பட்டோர் பட்டினியோடு வாழுகின்றனர்.

உலகப் பசி தினம் என்பது முதன்முதலில் தி ஹங்கர் என்ற திட்டம் மூலம் நிறுவப்பட்டது.

பின்பு அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் உலக பட்டினி தினம்.

2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 28ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்காமல் லட்சக்கணக்கான குழந்தைகள், பெரியவர்கள் உயிரை துறக்கும் துயர நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் 70 மில்லியன் டன் உணவு ஆண்டுதோறும் வீணடிப்படுவதாக 2021ல் ஐநா உணவுக்கழிவு குறியீடு தெரிவித்துள்ளது.

உலக அளவில் உணவு கிடைப்பதில் சமநிலை இன்றி இப்படி பட்டினியால் உயிர் விடுபவர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.