இன்று அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம்
விளையாட்டு என்பது உடல், மனதை ஆரோக்கியமாக வைக்கிறது. விளையாட்டுக்களால் நம் சமூகம் பல்வேறு வளர்ச்சிகளை காண்கின்றன.
பல்வேறு மொழி, இனம், கலாசார வேறுபாடுகளை கடந்து உலக மக்களை ஒருங்கிணைக்கிறது. விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு.
அதற்காகவே ஐ.நா., சார்பில் ஏப். 6ல் வளர்ச்சி, அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'விளையாடும் இடங்களில் சம வாய்ப்பு; சமூகத்தை ஒருங்கிணைக்கும் விளையாட்டு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சி, அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் ஏற்பட விளையாட்டு வழிவகுக்கிறது.
மனித சமுதாய வளர்ச்சிக்கு விளையாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. மேலும் இதன் மூலம் உலகம் முழுவதும் அமைதி பெற உழைப்போம்.