இன்று தேசிய கல்வி தினம்

இந்திய தேசிய கல்வி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவ., 11ல் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பத்தாண்டுகள் பதவி வகித்தவர் அபுல் கலாம் ஆசாத்.

இவரது பிறந்த தினம் நவ. 11, தேசிய கல்வி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் துவக்ககால கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.

காங்., தலைவராக இருந்தார். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார்.

இவரது பதவிக்காலத்தில் 1951ல் நாட்டின் முதல் ஐ.ஐ.டி., 1953ல் பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) போன்றவை தொடங்கப்பட்டன.

'சுதந்திரத்தை வென்ற இந்தியா' உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

கல்வி மூலம் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கலாம். அதற்கு இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் வழங்குவது அவசியம்.

நம் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.