மிதக்கும் சோலார் பேனலுக்கு மாறும் உலகம்..!
சூரிய மின்சக்தி உற்பத்திக்கு பேனல்கள் அமைக்க பொதுவாக அதிக இடம் தேவை.
இடப்பற்றாக்குறைக்கு தீர்வு தரும் விதமாக, தற்போது நீர்நிலைகளில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைப்பது அதிகரித்து வருகிறது.
இந்தியா, இந்தோனேசியாவிலும் இதுபோன்ற சோலார் பண்ணைகளை உருவாக்கி வருகின்றன.
நிலத்தில் அமைக்கப்படும் சோலார் பண்ணைகளை போலவே, மிதக்கும் சோலார் பண்ணைகள், சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இது வெயில் மற்றும் மேகமூட்டமான காலத்திலும் மின்சாரத்தை உருவாக்குகிறது.
சீனா, தென்கொரிய உள்ளிட்ட நாடுகளும், மிதக்கும் சோலார் பண்ணைகளில் அதிகளவில் முதலீடு செய்துள்ளன.
மிதக்கும் சோலார் பண்ணைகளுக்கு, 2வது மிகப்பெரிய சந்தையாக ஐரோப்பிய சந்தை உள்ளது.
நீர்நிலைகளில் தீங்கு விளைவிக்கும் ஆல்கா பூக்கள் உருவாகும் வாய்ப்புகளை இது குறைக்கும்.
இது புவியின் சுற்றுப்பாதையில் சூரியனின் சக்தியை பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து பரிசோதிக்கும்.