இன்று சனி மகாபிரதோஷம்... சிவனிடம் வைக்கும் கோரிக்கையாவும் உடனே நிறைவேறும் !

ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான், மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி தினம்.

எனவே சனிக்கிழமைகளில் வரும் திரயோதசி திதிக்கு மகாபிரதோஷம் என்ற பெயர் உண்டானது.

மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது, குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள்.

அந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை.

சனிப்பிரதோஷ வேளையில் நாம் சிவபெருமானை தரிசனம் செய்தாலே நமக்கு நற்பலன்கள் உண்டாகும்.

சனிப்பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால் ஓர் ஆண்டு முழுவதும் பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.