இந்தியாவிலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்கள்... டாப் 10 பட்டியல் இதோ

தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 2024ம் ஆண்டில் இந்தியாவிலேயே பெண்களுக்கான 10 சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கு சாதகமான, பாதுகாப்பான சூழல் ஆகியவற்றின் அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரி முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில், 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் கர்நாடகாவை சேர்ந்த பெங்களூரு, இரண்டாமிடத்தில் தமிழகத்தை சேர்ந்த தமிழகம் உள்ளது. மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகியவை 3, 4 மற்றும் 5ம் இடத்தில் உள்ளன.

கோல்கட்டா, ஆமதாபாத், புதுடில்லி மற்றும் குருகிராம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தை சேர்ந்த கோவை 10ம் இடத்தை பிடித்துள்ளது.

முந்தைய ஆண்டில் முதலிடத்தில் இருந்த சென்னை, தற்போது இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், வாழ்க்கைத் தரம் குறித்த தரவரிசையில், நாட்டின் முதலிடத்தில் கோவை நகரமும், இரண்டாமிடத்தில் புனே, மூன்றாமிடத்தில் சென்னையும் உள்ளன.