சிரித்து வாழ வேண்டும்… இன்று உலக மகிழ்ச்சி தினம்!
மக்கள் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 20ல் உலக மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மகிழ்ச்சியாக வாழ்வது, மனித உரிமைகளில் ஒன்று என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஐநா 2012ல் உலக மகிழ்ச்சி நாளை உருவாக்கியது.
வறுமையை ஒழிப்பது, சமத்துவமின்மையைக் குறைப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஆகியவை இதன் முதன்மை வளர்ச்சி நோக்கங்களாகும்.
'ஒன்றிணைந்து மகிழ்ச்சிகாணல்' என்பது இவ்வாண்டிற்கான தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
எப்போதும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பது நமது ஆயுளை கூட்டும்.
மகிழ்ச்சியின் அடிப்படையாக உணரப்படுவது சிரிப்பு. எனவே சிரிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும்.
ஒரு மனிதனின் மகிழ்ச்சி என்பது அவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றி உள்ளவர்களின் மனநிலையையும் மாற்றி வாழ்க்கையை இனிமையாக்கும்.
நம்மால் முடித்த அளவு பிறருக்கு உதவி செய்வதன் வழியாக மகிழ்ச்சியை பெறவும் முடியும், பிறருக்கு தரவும் முடியும்.