குழந்தைகளுக்கு வரும் ஹார்ட் - அட்டாக்
சமீப வாரங்களில் ஹைதராபாத், பெங்களூரு என எதிர்பாராவிதமாக ஹார்ட் அட்டாக்கால் குழந்தைகள் உயிரிழந்ததால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிறவி இதயக் கோளாறுகள், குறிப்பிட்ட வயது வரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் குழந்தைகளுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புள்ளது. இதை, 'சடன் கார்டியாக் டெத் இன் சில்ரன்' என்பர்.
ஒருசில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதயத் தசைகள் பலவீனமாக இருக்கும்போது, ரத்த ஓட்டம் தடைபடலாம். இது போன்ற பிரச்னைகள், மரபியல் காரணிகளால் வரும்.
மரபியல் காரணி தவிர, கால்சியம் படிவது, துடிப்பு உருவாவதிலேயே பிரச்னை இருக்கலாம். இவர்களுக்கு 'ஈசிஜி' எப்போதும் இயல்பாக இருக்காது.
கரு உருவான 18 -- 20வது வாரத்தில் செய்யப்படும் 'அனாமலி' என்ற அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனையில், இதய செயல்பாட்டில் பிரச்னை இருந்தால் தெரியாது.
குழந்தை பிறந்த பின் செய்யப்படும் பரிசோதனைகளில் பிரச்னை உள்ளதா என்பதை ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்தாலே, இதயத்தில் வேறுபாடு இருந்தால் தெரிந்துவிடும்.
எதிர்பாராத சமயத்தில் குழந்தை நிலைகுலைந்து விட்டால், கழுத்தில் துடிப்பு (பல்ஸ்) உணர முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.
துடிப்பை உணர முடியாவிட்டால், மருத்துவமனைக்கு செல்லும் இடைப்பட்ட நேரத்தில், சமதள மேஜையில் படுக்க வைத்து, விலா எலும்புகளை அழுத்தி மசாஜ் தருவது அவசியம்.
நிமிடத்திற்கு 100 மசாஜ் கொடுத்தால், இதயத் துடிப்பை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.