சன் டூங்... உலகின் பெரிய இயற்கை குகை இது !

உலகின் பெரிய இயற்கை குகை, வியட்நாமில் 'போங் நா-கே பாங்' தேசிய பூங்காவில் அமைந்துள்ளது.

இதன் பெயர் 'சன் டூங்' குகை. நீளம் 9 கி.மீ. அகலம் 650 அடி. உயரம் 490 அடி.

'சன் டூங்' என்பதற்கு 'மலையாறு குகை' என பொருள்.

மலையில் ஓடும் ஆறு, இக்குகை வழியாக செல்கிறது.

நுாற்றுக்கணக்கான ஆண்டுக்கு முன் நீர் அரிப்பினால் இக்குகை உருவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

1991ல் அந்நாட்டின் பஹம் டை ஹாங் என்பவர் கண்டுபிடித்தார்.

கடந்த 2009ல் 'பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சி கூட்டமைப்பினர்' ஆய்வுக்குப் பின் இது மிகவும் பிரபலமடைந்தது.