திருப்பதி ஏழுமலையானுக்குரிய நித்ய சேவைகள் !
சுப்ரபாத சேவை... அதிகாலை 3.00 முதல் 3.30 மணி வரை. அறிதுயில் கொள்ளும் மாலவனை எழுப்பும் சேவை இது. சேவை நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பக்தர்கள் கூடிவிட வேண்டும்.
தோமாலை சேவை... தோமாலை என்ற சொல்லுக்கு மலர்களால் ஆன மாலை என பொருள். பூக்கள், துளசி மாலைகள் அலங்காரத்தில் திருவேங்கடமுடையான் அருள்பாலிப்பார். காலை 4.30க்கு சேவை நிறைவடைகிறது.
கொலுவு (தர்பார்) தரிசனம்... தோமாலை சேவைக்கு பின் 15 நிமிடங்களுக்கு கொலுவு தரிசனம் நடக்கும். அப்போது பெருமாளுக்கு பஞ்சாங்கத்தில் அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்கள் வாசிக்கப்படும்.
சஹஸ்ர நாமார்ச்சனை... தினமும் மூன்று வேளை இந்த சேவை நடக்கிறது.
நித்ய கல்யாணோத்ஸவம்... மதியம் 12.00 முதல் 1.00 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப ஸ்வாமிக்கு நித்திய கல்யாணோத்ஸவம் நடக்கிறது.
டோலோத்ஸவம்... கல்யாணோத்ஸவத்துக்குப் பின் கண்ணாடி அரங்கத்துக்குள் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளுவார் பெருமாள். இது மதியம் 1.00 முதல் 2.00 மணிக்கு நடக்கும்.
ஆர்ஜித பிரம்மோத்ஸம்... ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி சேஷ, கருட, அனுமன் வாகனங்கள் மீது எழுந்தருவார். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை வைபவோத்ஸவ மண்டபத்தில் நடக்கிறது.
தொடர்ந்து ஆர்ஜித வசந்தோத்ஸவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, ஆலயமணி மணியோசை, ஏகாந்த சேவை என நள்ளிரவு வரை பெருமாளுக்கு ஆராதனைகள் நடந்தவாறே இருக்கும்.
இவை தவிர ஒவ்வொரு கிழமைக்கும் என சிறப்பு உத்சவங்களும் திருப்பதி கோவிலில் நடக்கிறது.