மாடி தோட்டத்தில் வளர்ப்பதற்கேற்ற சில செடிகள்

தக்காளி, உ.கிழங்கு, வெண்டை, கத்தரி, முள்ளங்கி, மிளகாய், வெள்ளரி, கோவக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கை, அவரை உட்பட பல செடிகளை மொட்டை மாடியில் வளர்த்து அறுவடை செய்யலாம்.

வண்ணமயனான பூக்கள்... ரோஜா, சாமந்தி, செவ்வந்தி, மல்லிகை, முல்லை, அல்லி, துலிப், டேலியா, அரளி, சங்குப்பூ உட்பட பல்வேறு பூச்செடிகளை வளர்க்கலாம்.

பழங்கள்... கொய்யா, எலுமிச்சை, வாழை, மா, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு போன்ற குட்டை வகை செடிகளை எளிதாக வளர்க்கலாம்.

புதினா, கொத்தமல்லி, பிரண்டை, கறிவேப்பிலை, துளசி, பூண்டு, இஞ்சி, முருங்கை, சிறுகீரைகள், தண்டுக்கீரை, மணத்தக்காளி கீரை, பாலக், அகத்தி, வெந்தயக்கீரை போன்ற பல மூலிகை, கீரை செடிகளை வளர்க்கலாம்.

செடிகளை வளமான மண்ணுடன் கூடிய நடுத்தர அளவிலான தொட்டிகள், குரோ பேக்குகள் அல்லது பெரிய பிளாஸ்டிக் பைப்கள் போன்ற பல வழிகளில் வளர்க்கலாம்.

சாதாரண தோட்டத்தில் தரையில் பாத்தி கட்டினாலே செடிகளை எளிதாக வளர்க்கலாம். இது எளிதான முறையும் கூட. செடிகளுக்கு தண்ணீர் எளிதாகச் செல்ல வாய்ப்புள்ளது.

அவரையில் கொடி வகைகளை தவிர்த்து, குத்துச்செடிகளாக வளர்க்கலாம். காய்களும் அதிகளவில் கிடைக்கும். குறைவான இடமே இதற்கு போதுமானது.