முகத்தை அழகாக மாற்றும் வேர்க்கடலை

வேர்க்கடலையில் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளது. இவை முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் வயது முப்பு பிரச்னைகளை குறைக்கும் தன்மை உள்ளது.

வேர்க்கடலையில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது சருமத்தை ஈரப்பத்துடன் வைத்திருக்கவும், இயற்கையான ஈரப்பதத்தைத் தக்க வைக்கும்.

வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும்,வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் ஈ சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது புற ஊதா கதிர்களின் தீங்கான விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

வேர்க்கடலையில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி, சருமத்தைப் பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.