இந்தியாவில் விசிட் செய்ய வேண்டிய 7 பழமையான குகைகள்

மலைச்சரிவுகளில் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள், அழகிய புத்தர் சிலைகள், பிரமாண்ட தூண்கள் என வியப்பில் ஆழ்த்துகிறது மகாராஸ்ஜ்டிராவின் அஜந்தா குகைகள்.

மகாராஷ்டிராவின் எல்லோராவில் பவுத்த, இந்து மற்றும் சமண கலை மற்றும் கட்டடக்கலையை காட்சிப்படுத்தும் குகைகள் உள்ளன.

மும்பைக்கு அருகேயுள்ள எலிஃபண்டா குகைகள் கிபி. 5 முதல் 7ம் நூற்றாண்டில் சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன.

கர்நாடகாவிலுள்ள பாதாமி குகைக் கோவில்கள் கிபி 6ம் நூற்றாண்டை சேர்ந்தவை. நுணுக்கமான சிற்பங்களை கொண்டுள்ளது.

மத்தியபிரதேசதிலுள்ள உதயகிரி குகைகள் நுணுக்கமான சிற்பங்களுக்கு பெயர் பெற்றவை.

மகாராஷ்டிராவின் கன்ஹேரி குகைகளில் பாறையில் வெட்டப்பட்ட சிலைகள் மற்றும் கட்டடக்கலை பார்ப்போரை பிரமிக்க வைக்கின்றன.

மகாராஷ்டிராவிலுள்ள கர்லா குகைகள் பவுத்த தளமாகும்; கிமு 1ம் நூற்றாண்டை சேர்ர்ந்தவை.