இன்று... தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் !

பொதுமக்கள் மத்தியில் கேன்சர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும், நவ., 7 ம் தேதி, தேசிய கேன்சர் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தாண்டின் மையக் கருத்தாக, 'நம்பிக்கையுடன், இதய பூர்வமாக புற்றுநோயை எதிர்த்து போராடுங்கள்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2020ஐ விட 2025ல் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரிக்கும்; இந்நோயாளிகளின் எண்ணிக்கை 29.8 மில்லியனாக அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் கணித்துள்ளது.

பலவகை புற்றுநோய் இருப்பினும், ஆண்களை பொறுத்தவரை நுரையீரல் புற்றுநோய், பெண்களை மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புற்றுநோய் வருவதற்கு 'ஜெனடிக்' எனப்படும் குடும்ப பின்னணி உள்ளிட்டவை காரணமாக இருப்பினும் உணவு பழக்கம், சுத்தம், சுகாதாரம், ரசாயன மாசு போன்றவையும் பாதிப்புக்கு வழிவகுக்கிறது.

குணப்படுத்த முடியும்... புற்றுநோய் பாதிப்பை துவக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக மார்பக புற்றுநோய், கர்ப்ப பை வாய் புற்றுநோய்க்கு துவங்கிய நாள் முதல், நான்காவது கட்டத்தை எட்டும் வரை இடைவெளி இருக்கக்கூடும்.

இந்த இடைவெளியில் ஏதாவது ஓரிடத்தில் கண்டறிந்துவிட்டால் கூட, குணப்படுத்திவிட முடியும்.

வாயில் சிறிய புண் ஏற்பட்டாலோ, உடலில் ஏதாவது ஓரிடத்தில் வலியுடன் அல்லது வலி இல்லாத கட்டி எதுவும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.