டிஷ்வாஷர் தேர்வும், பராமரிப்பும்...

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களுக்கு 'டிஷ்வாஷர்' மிகவும் அவசியமானது. அவற்றை எப்படி தேர்வு செய்வது மற்றும் பராமரிப்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.

மூன்று, நாங்கு பேர் தான் இருக்கிறார்கள் எனில் 8 பிளேஸ் செட்டிங்ஸ் கொண்ட சின்ன டிஷ் வாஷர் போதுமானது. பெரிய குடும்பம் எனில் 14 பிளேஸ் செட்டிங் இருக்கும் வாஷர் பொருத்தமானதாக இருக்கும்.

நம் இந்திய சமையலறையில் கடாய், வாணலி, கரண்டி, தட்டு, டம்பிளர் ஆகியவை தான் இருக்கும். அதிக பாத்திரங்கள் பயன்படுத்துபவர்கள் 14 செட்டிங்ஸ் உள்ள டிஷ் வாஷர் வாங்குவது சிறந்தது.

நீங்கள் சொந்த வீட்டில் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் சமையலறையில் காஸ் மேடைக்கு கீழ் இன்பில்ட் டிஷ் வாஷர் பொருத்திக்கொள்ளுங்கள்.

டிஷ் வாஷர் பிராண்ட்களை பொறுத்து பாத்திரங்கள் கழுவ குறிப்பிட்ட நேரம் எடுக்கும்.

அதன் பயன்பாட்டை பொறுத்து அவற்றிற்கு பயன்படுத்தப்படும் உப்பை நிரப்ப வேண்டும். உப்பு இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.

பாத்திரங்கள் பளபளக்க டிஷ்வாஷர்களுக்கு ஏற்ற தரமான டிஷ்வாஷ் பவுடர் அல்லது திரவத்தை வாங்குவதும் மிகவும் அவசியம்.

மாதம் ஒரு முறை டிஷ்வாஷரை, பாத்திரங்களை இல்லாமல் அதன் செல்ப் கிளீனிங் ஆப்ஷனை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.