கோட் சூட், பிளேசர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கோட்: என்ன வித்தியாசம்?

வாழ்வின் பெரிய நாளில் அணியும் அந்த கோட் சூட்டை எந்த காம்பினேஷன்களில் அணிந்தால் அழகாக இருக்கும், இதற்கும், பிளேசர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கோட் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து தெரிந்துகொள்வோம்.

இது ஒரு பார்மலான, எளிமையான உடை. சூட்டை அதே துணியினால் ஆன பேண்ட் உடன் தான் பொருத்தமாக அணிய வேண்டும்.

பிளேசர் மற்றும் ஸ்போர்ட் கோட்டுகளுடன் ஒப்பிடுகையில் சூட் ஜாக்கெட் கச்சிதமாக உடலுடன் பொருத்தியபடி இருக்கும்.

ஒரே நிறத்தில் தான் கோட் சூட் இருக்கும். பெரும்பாலும் நேவி ப்ளூ, சார்கோல் க்ரே, லைட் க்ரே மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும்.

சூட் மற்றும் கஃப் பட்டன்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கில், குறைந்த கான்ட்ராஸ்டாக இருக்கும்.

சிங்கிள் ப்ரெஸ்டட் சூட் ஜாக்கெட், டபுள் ப்ரெஸ்டட் சூட் ஜாக்கெட் என இரு வகை உண்டு. அவற்றில் பாக்கெட்டுகள் மற்றும் பட்டன்கள் மாறுபடும்.

பிளேசர்கள் வெர்சடைல் ஆனவை. இதனை பேன்ட், சினோஸ் என எதனுடனும் மிக்ஸ் மேட்ச் செய்யலாம். இது பல வண்னங்களில் கிடைக்கும்.

போலோ விளையாட்டு, வேட்டையாடுதல், துப்பாக்கிச் சுடுதல் போன்ற 'ஸ்போர்ட்டிங்' செயல்பாடுகளில் முதன் முதலில் அணியப்பட்டதால், இந்த வகை கோட்களுக்கு 'ஸ்போர்ட்ஸ் கோட்' என்று பெயர் வந்தது.

பார்மல் மற்றும் கேசுவல் பிளேசர்கள் உள்ளன. கேசுவல் பிளேசர்கள் ஜீன்ஸ் உடன் அணியும் போது அழகாக இருக்கும்.