சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடுக்கி
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, வாகமண் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.
அவற்றிற்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
கடந்த காலங்களில் பயணிகள் வருகையில் மூணாறு முதலிடம் வகித்த நிலையில், சமீப காலமாக வாகமண் முதலிடம் வகிக்கிறது.
இங்கு, மாட்டுபட்டி அணை, ராமக்கல்மேடு, அருவிக்குழி, வாகமண் மலை குன்று மற்றும் சாகச பூங்கா, பாஞ்சாலிமேடு, மூணாறு தாவரவியல் பூங்கா உட்பட பல இடங்களை ரசிக்கலாம்.
இதுதவிர மின்வாரியம், வனத்துறை ஆகியவற்றுக்கு சொந்தமான சுற்றுலா பகுதிகள், மீசை புலி மலை உள்ளிட்ட மலை பகுதிகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.
இடுக்கி, தேனி மாவட்ட எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் சூரியநெல்லி அருகேயுள்ள கொழுக்குமலையில், சூரிய உதயம், அஸ்தமனத்தை காணலாம்.