மஞ்சள் தூளில் கலப்படத்தை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்
நிறம், சுவைக்காக மட்டுமின்றி ஆரோக்கியத்திற்காகவும் அனைத்து வித சமையலிலும் தினமும் பயன்படுத்தப்படும் பொருள் மஞ்சள்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சளை உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஆயுர்வேதம் மருத்துவத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆனால் லாப நோக்கத்துக்காக இந்த மஞ்சளில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மஞ்சள் தூளில் சுண்ணாம்பு பவுடர், ஈய குரோமேட் மற்றும் மெட்டானில் மஞ்சள் உட்பட பல்வேறு பொருட்களை கலக்க வாய்ப்புள்ளது. இவை ஆரோக்கிய கேடுக்கு வழிவகுக்கும்.
எனவே, ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மஞ்சளைச் சேர்த்து சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்; கலக்கக் கூடாது.
சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் டம்ளரின் அடியில் படிந்து, தண்ணீர் தெளிவாக இருந்தால் சுத்தமான மஞ்சள் என்பதை குறிக்கும்.
தண்ணீர் கலங்கலாக இருந்தாலோ, மிதந்து கொண்டிருந்தாலோ கலப்படத்தைக் குறிக்கிறது.
சிறிது மஞ்சள் தூளை எடுத்து ஒரு கண்ணாடியில் வைக்கவும். அதில் சில துளிகள் செறிவூட்டப்பட்ட ஹைட்ரோகுளோரிக் அமிலம் சேர்க்கவும்.
சிறிது நேரத்தில் இளஞ்சிவப்பு நிறமாக மாறினால், அதில் மெட்டானில் மஞ்சள் இருப்பதைக் குறிக்கிறது. சிறிய குமிழ்கள் இருந்தால், சுண்ணாம்பு தூள் சேர்க்கப்பட்டிருப்பதை குறிப்பதாகும்.