இன்று உலக புன்னகை தினம்
ஒரு சிறு புன்னகை போதும், எதிரிகளையும் நண்பராக்கலாம்..வீடாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, மெல்லிய புன்னகை ஒன்றைப் பூத்திடுங்கள்.
ஹார்வே பால் (Harvey Ball) என்பவர் 1963ல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். பின்னர் உலக புன்னகை தினம் 1999ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
புன்னகையால் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் விரட்டலாம். இதன் முக்கியத்துவத்தை உணரும் விதமாக அக். முதல் வெள்ளி (அக்.3) உலக புன்னகை தினம் கொண்டாடப்படுகிறது.
புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது, அவருக்கு 'வணக்கம்' சொல்லி கை குலுக்கி நம் பெயருடன் அறிமுகம் ஆகிறோம்.
இதனுடன் புன்சிரிப்பையும் வெளிப்படுத்தினால், அந்தச் சந்திப்பு நம்மால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிடும்.
நமது முகத்தை எப்போதும் ஆங்ரி பேர்டு மாதிரி கோபமாக வைக்காமல் சந்தோஷமாக வைக்க வேண்டும்.
எந்த நேரமும் புன்னகைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், தேவையான சந்தர்ப்பங்களில் புன்னகைக்க வேண்டும்.
புன்னகை என்பது அன்பின் வெளிப்பாடு! இது மனிதனை, புத்துணர்ச்சிவுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஆயுட்காலத்தை நீட்டிக்க புன்னகை உதவும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.