ஆபத்தான உணவு பட்டியலில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர்... இனி கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துங்க !
பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலில், பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. இதற்கு, காற்று மாசு, சுகாதாரமற்ற, 'வாட்டர் கேன்' உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
பிளாஸ்டிக் துகள்களில், 90 % மிகவும் சிறிதான 'நானோ பிளாஸ்டிக்' என்பது கண்டறியப்பட்டது. எனவே தான், பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர், ஆபத்தான உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவை, செரிமானப் பாதை, நுரையீரலின் திசுக்கள் வழியாக சென்று, ரத்த ஓட்டத்தில் நுழைந்து, பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மனித நுரையீரல், ரத்தம், மலம் ஆகியவற்றில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, அதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில், துருப்பிடிக்காத, 'ஸ்டீல்' மற்றும் மூங்கில் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த, உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய, 10, 20 ரூபாய்க்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்களில், மீண்டும் தண்ணீர் பிடித்து அருந்த வேண்டாம். அதுதான், அதிகளவில் உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் செல்ல காரணமாகும்.
கேன் குடிநீர் நிறுவனங்களுக்கு பாசி படர்ந்த, கீறல்கள் உள்ள அல்லது பலமுறை பயன்படுத்தப்பட்ட, 20 லிட்டர் குடிநீர் கேன்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.