ஆன்மிகமும் அழகும் நிறைந்த ராமேஸ்வரம்!

ராமேஸ்வரம் வருவதை புண்ணியமாக கருதி இன்றும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

ராமநாதசுவாமி கோவில்இந்த கோயில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. இங்கு வரும் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள 22 கிணறுகளிலும் புனித நீராடுகின்றனர்.

அக்னி தீர்த்தம்இந்த தீர்த்தத்தில் குளித்தால் பக்தர்கள் பாவங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. அதுவும் அக்னிதீர்த்த கடலில் அமாவசையன்று பக்தர்கள் நீராடுவதை புனிதமாக கருதுகின்றனர்.

கந்தமாதன பர்வதம்ராம பதம் என்றும் அழைக்கப்படும் கந்தமாதன பர்வதம் ராமேஸ்வரத்தில் உள்ள புனித தலங்களில் ஒன்று. ராமநாதசுவாமி கோவிலில் இருந்து 3 கிமீ தொலைவில் ஒரு அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது.

ராமர் & லக்ஷ்மண தீர்த்தர்கள்ராமர் குளத்தில் நீராடியதால் அந்த இடம் ராமர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது . லிங்க வடிவில் சிவனைக் கொண்ட சிறிய கோயிலின் முன் லக்ஷ்மண தீர்த்தம் காணப்படுகிறது.

தனுஷ்கோடிபுயலில் உருக்குலைந்து 50 ஆண்டுகளுக்கு பிறகும், இன்றும் கம்பீரமாக வரலாற்று சின்னமாக நிற்கும் இடிந்த கட்டடங்களை பலரும் கண்டு செல்கின்றனர்.

குருசடை தீவுராமேஸ்வரத்தில் இருக்கும் 21 தீவுகளில் அதிகம் விரும்பப்படும் இடங்களில் ஒன்று குருசடை தீவு. இது கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாக விளங்குகிறது.

பாம்பன் பாலம்அறிவியல் வளர்ச்சி அதிகம் இல்லாத 1914 ல் இந்த தூக்கு பாலம் கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.