ஆன்லைன் ஷாப்பிங்... பெண்களை விட ஆண்களே முன்னிலை !

பொதுவாக ஷாப்பிங் என்றாலே பெண்கள் பொருட்களாக வாங்கிக் குவிப்பர் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் புதிய ஆய்வு ஒன்று இதனைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஐ.ஐ.எம்., அகமதாபாத் பல்கலை சார்பில் சமீபத்தில் 'டிஜிட்டல் சில்லறை சேனல்கள் மற்றும் நுகர்வோர்: இந்தியப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்கள் அதிக பணம் செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பெண்களை விட ஆண்கள் 36 % அதிகமாக பணம் செலவழிப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது, பெண்கள் ரூ.1,830 செலவிடும் நேரத்தில், ஆண்கள் ரூ. 2,484 செலவழிக்கின்றனர்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் 58% உடை, காலணி மற்றும் அலங்கார பொருட்களில் செலவிடப்பட்டுள்ளது. பிற பயன்பாட்டில் 28 %, மின்னணு பொருட்களில் 16 % செலவிடப்பட்டுள்ளது.

ஆண்கள் அதிக பணம் செலவழித்தாலும் கூட, பெண்கள் 35 நிமிடங்கள் செலவிடுகையில், அவர்கள் 34.4 நிமிடங்களில் செலவிடுகின்றனர். இதில் அதிகளவிலான வித்தியாசம் இல்லை.

ஃபேஷன் மற்றும் ஆடைகளுக்கான கட்டணமும் பெரும்பாலும் ரொக்கமாகவே டெலிவரியின் போது ஆண்கள் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.