மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 6 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.

வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக 21ம் தேதி கள்ளழகர் கோவிலில் இருந்து அழகர் புறப்பட்டார்.

மறுநாள் ஏப்.,23ம் தேதியன்று புறப்பட்டு வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்கு முன்பாக வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் அமர்ந்து அழகரை வரவேற்றார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்கு முன்பாக ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அழகர் அணிந்து கொண்டார்.

ஆற்றின் மையப் பகுதியில் அமைந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நாளை 24ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பின்னர் கருட வாகனத்தில் தேனூார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார்.

ஏப்ரல் 26ம் தேதி அழகர் பூபல்லக்கில் அழகர்மலைக்கு திரும்புதல் வைபவம் நடக்கிறது