கேரன்டி கையெழுத்து போட்டால் சிபில் ஸ்கோர் என்ன ஆகும்?

குறைந்த வட்டியில் எந்தக் கடன் வாங்க வேண்டும் என்றாலும் சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

மற்றவர்களின் கடனுக்கு கேரன்டி கையெழுத்து போடுவதால் நமது கடன் புரொபைல் என்ன ஆகும் என்ற கேள்வி எழும்.

கேரன்டி கையொப்பமிடும்போது, வங்கி உங்கள் கடன் அறிக்கையையும் எடுத்துக்கொள்ளும்.

நீங்கள் கடன் வாங்காதவர்களாக இருந்தாலும், கேரன்டி கையெழுத்து போட்டால் கடன் பெற்றதாகவே பதிவாகும்.

இதனால் உத்தரவாதமளிப்பவரின் சொந்தக் கடன் பெறும் தகுதி குறையும்.

கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்தாமல் விட்டால் கேரன்டி கையெழுத்து போட்டவரின் சிபில் ஸ்கோரும் சரியும்.