கண்ணன் பிறந்தான்.. எங்கள் கண்ணன் பிறந்தான்... இன்று கிருஷ்ண ஜெயந்தி !

இந்நாளில் தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது நம்பிக்கை.

எனவே, கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டைச் சுத்தப்படுத்தி, வாசலில் இருந்து பூஜை அறை வரையில், பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு கண்ணனை வரவேற்கலாம்.

கண்ணனை நம்பிச் சரணடைந்தால் முன்வினை பாவம் ஓடி விடும்.

கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார்.

இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல் போன்றவற்றை நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, தேன்குழல், திரட்டுப்பால் உட்பட பல்வேறு பொருட்களையும் படைக்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தியன்று தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.