அருணாசலப் பிரதேசத்தின் அழகிய நகரம் தவாங்.. சுற்றுலாவிற்கு தயாராகுங்கள்...
அருணாசலப்பிரதேசத்தில் சுமார் 10,000 அடி உயரத்தில் இமயமலைக்கு நடுவே இயற்கை அழகு, ஆன்மீக சூழலால் நம்மை கவரும் வகையில் இருக்கும் நகரம் தவாங்.
தவாங் பள்ளத்தாக்கு வடக்கில் திபெத், தென்மேற்கில் பூட்டான் மற்றும் கிழக்கில் சேலா மலைத்தொடரை எல்லையாக கொண்டுள்ளது. இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன.
தவாங் மடலாயம் : கடந்த 17 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த மடாலயம் இந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயமாகவும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மடமாகவும் உள்ளது.
சேலா பாஸ் : சுமார், 13,700 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாஸ் தவாங்கை கவுகாத்தியின் திராங்குடன் இணைக்கிறது. சேலா ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. மிக உயரமான மலை பாதையாக கருதப்படுகிறது.
ஷோங்கா-சேர் ஏரி : அழகிய செழுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட ஷோங்கா-ட்ஸர் ஏரி, மாதுரி ஏரி என்றும் அழைக்கப்படுகிறது.
தவாங் போர் நினைவுச்சின்னம் : 1962 இந்திய-சீனப் போரில் நாட்டுக்காக போராடி வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் வீரத்தை நினைவாக இந்தச் சின்னம் அமைக்கப்பட்டது.
நுரானாங் நீர்வீழ்ச்சி : இந்த 100 அடி உயரம் கொண்ட அழகிய நீர்வீழ்ச்சி, தவாங்கிலிருந்து 80 கிமீ தொலைவில் ஜெமிந்தாங் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
கோரிசென் சிகரம் : அருணாச்சல பிரதேசத்தின் மிக உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 22,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
கமெங் ஆறு : அடர்ந்த காடுகள், ஆடம்பரமான நதி அமைப்பு கொண்டு ஒரு அழகிய ஆறு இது. இங்கு ராஃப்டிங் சாகசத்திலும் ஈடுப்படலாம்.
பெங் டெங் சோ ஏரி, ஜஸ்வந்த் கர் போர் நினைவுச்சின்னம், தக்சங் கோம்பா, பும்லா பாஸ், சம்டென் யோங்சா மடாலயம், கெஷிலா சிகரம் மற்றும் நகுலா ஏரி போன்ற அழகிய இடங்களும் உள்ளன .