இடம்பெயரும் பறவைகள் தினம் இன்று !
இடம் பெயரும் பறவைகளை பாதுகாப்பது, அவற்றுக்கான வசதிகளை உருவாக்கும் விதமாக மே 10ல் இடம்பெயரும் பறவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பறவைகள் இடம்பெயர்வு என்பது ஒரு இயற்கை அதிசயமாகும்.
ஆயிரக்கணக்கான பறவை இனங்கள், குறிப்பாக அறியப்பட்ட அனைத்து இனங்களிலும் 20 % இனப்பெருக்கம் மற்றும் உணவளிக்க நீண்ட தூரம் பயணிக்கின்றன.
அவை தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிக்கவும், இனப்பெருக்கம் செய்யவும், வளர்ப்பதற்கு சிறந்த வாழ்விடங்களைக் கண்டறியவும் ஆயிரக்கணக்கான கி.மீ., தூரம் பறக்கின்றன.
இனப்பெருக்கம் செய்யுமிடங்களில் நிலைமைகள் சாதகமற்றதாக மாறும்போது, வாழ்வாதாரத்தை தேடி சிறப்பாக இருக்கும் பகுதிகளுக்கு பறக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
'பகிரப்பட்ட இடங்கள்: பறவைகளுக்கு ஏற்ற நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குதல்' என்பது இந்தாண்டின் மையக்கருத்தாகும்.
புலம்பெயர்ந்த பறவைகள் நீண்ட தூரம் பயணிப்பதால், அவை வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே முக்கிய பங்கு வகிக்கின்றன.