தேசிய விண்வெளி தினம் இன்று !

இந்தியாவின் 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய 'சந்திரயான் 3' விண்கலத்தின் லேண்டர், 2023 ஆக. 23ல் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

இப்பகுதியில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தியது.

ஒட்டுமொத்தமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின் நிலவில் இச்சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடானது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் (ஆக.23) தேசிய விண்வெளி தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி 2023ல் அறிவித்தார்.

2008 அக்., 22ல் 'சந்திரயான் 1' விண்கலம் ஏவப்பட்டது. இது நிலவை 312 நாட்கள் சுற்றியது. நிலவில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை கண்டுபிடித்தது.

2019 ஜூலை 22ல் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், நிலவில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வட்டமடித்து ஆய்வு செய்தது.