மின் விளக்குகளால் ஜொலிக்கும் கனவு இல்லம்…
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நல்ல காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டும் என்பது அடிப்படை வழிமுறையாகும்.
அதில் மின்சார விளக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கட்டுமான
நிலையிலேயே தெளிவாக திட்டமிட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.
அறை நீளமான அமைப்பை கொண்டிருந்தால் 'சீலிங்' நடுவில் பெரிய சர விளக்கு அமைப்பு அழகாக இருக்கும்.
அதில் மின்சார விளக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கட்டுமான நிலையிலேயே தெளிவாக திட்டமிட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.
உணவு உண்ணும் அறைக்கு 'டியூப் லைட்' அல்லது மேலிருந்து தொங்கும் 'ஸ்பாட் லைட்' ஆகியவற்றின் வெளிச்சம் மேசையில் விழுமாறு அமைக்கலாம். ஒரு ஹோட்டல் லுக் கிடைக்கும்.
'பெட்ரூம்' மேற்கூரை 'பால்ஸ் சீலிங்' அமைப்பாக இருந்தால் 'டியூப்' அல்லது 'ஸ்பாட் லைட்டுகள்' பொருத்தலாம். இரவில் படிக்க உதவும்.
சுவருக்குள் அமைக்கப்படும் 'இன்பில்ட் விளக்குகள்' ஒயர்கள் வெளியே தெரியாமல் அழகாக காட்சி தருகின்றன.
புதிய வீட்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் போதே அதில் உள் அலங்காரம், மின் விளக்குகள் போன்றவற்றுக்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவது நல்லது.
இத்தகைய விளக்குகளில் பெரும்பாலானவை எல்.இ.டி., அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், மின்சார செலவு அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் வேண்டாம்.