இன்று ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்!

மனித உறவுகள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது.

தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.

எப்போது பிரச்னை என்று ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும்

லட்சியத்தை நோக்கி நம் முயற்சிகள் இருக்கும். அப்போது நம்முடைய ஆற்றல்கள் வெளிப்படத் துவங்கும்.

லட்சியம் நிறைவேற வேண்டுமே என்ற கவலை இருந்தால் தான் மனத்தெளிவு உண்டாகும்.

பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழவைக்கும். அதற்கு மாறாக பொறாமை, முரட்டுச்சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் எல்லாம் வருங்காலத்தில் நம்மை எதற்கும் தகுதியற்றவர்களாக்கிவிடும்.