இன்று உலக யானைகள் தினம்!
யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக., 12ல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வனப்பரப்பு குறைவது, உணவு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவை இதன் அழிவுக்கு காரணமாகிறது.
ஆப்ரிக்கா, ஆசியாவில் தான் யானைகள் அதிகம். ஆசிய யானைகளில் 44 சதவீதம் இந்தியாவில் உள்ளன.
சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் பங்கு மிகவும் முக்கியம். ஆனால் உலகில் ஆண்டுதோறும் பல்லாயிரம் யானைகள் வேட்டையாடப்படுகின்றன.
இதனால் தான் சில நேரங்களில் காடுகளை விட்டு சாலை, குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருகின்றன.
யானைகளின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
மின்வேலிகள், ரயில் விபத்துகள், நாட்டு வெடிகளும் காட்டு யானைகள் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கின்றன.
வனத்தை பாதுகாப்பதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன. யானைகள் தினத்தில் அவற்றை பாதுகாக்க மனித சமுதாயம் உறுதியேற்க வேண்டும்.