இதய நோய்களை உண்டாக்கும் மலச்சிக்கல்... எப்படி சரி செய்யலாம்?

தற்போது ஹார்ட் அட்டாக் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் பொதுவான ஒன்றாக மாறியுள்ளன.

வயதானவர்கள் மட்டுமின்றி மட்டுமின்றி, இளம் வயதினர் கூட ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

புகை பிடித்தல், மன அழுத்தம், உடல் பருமன் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை தான் இதய நோய்களுக்கான காரணிகளாக அறியப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், மலச்சிக்கலும் இதயநோய்க்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது

அதன்படி, யாருக்கெல்லாம் மலச்சிக்கல் உள்ளதோ அவர்களுக்கெல்லாம், இதயநோய் ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளது.

எனவே மலச்சிக்கலை தவிர்க்க முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் என நார்ச்சத்துள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

போதியளவு தண்ணீரை குடித்து, உடலை நீரேற்றமாக வைப்பதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

புரோபயாடிக் உணவுகளை சேர்க்கும் போது, ஆரோக்கியமான குடலை பராமரிக்கலாம்.

உடற்பயிற்சி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.