கும்பகோணத்தில் பார்க்க வேண்டிய கோவில்கள் !
கும்பேஸ்வரர் கோவில்... லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்லச் செல்ல ஊசி வடிவிலும் காணப்படும்; மாசி மகா மகம் பிரசித்தி பெற்றது.
முல்லை வனநாதர் கோவில், திருக்கருக்காவூர்... குழந்தை வேண்டியும், சுகபிரசவம் ஆகவும் வேண்டுதல் வைப்போரின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறார் இங்குள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்மன்.
சுவாமிநாத சுவாமி கோவில், சுவாமிமலை... முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும்
ஆபத்சகாயேஸ்வரர் கோவில், ஆலங்குடி... உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது அம்மன் சன்னதி. அடுத்து சுவாமி சன்னதி, பின் குரு சன்னதி என மாதா, பிதா, குரு அடிப்படையில் இக்கோவில் அமைந்துள்ளது.
நாகேஸ்வரர் கோவில்... தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 27வது தலம்.
சாரங்கபாணி கோவில்... பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 12வது திவ்ய தேசம்.